தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

30.08.1957 - கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினம்

‘கலைவாணர்’ என்றும் ‘என் .எஸ்.கே’ என்றும் அன்புடன் அழைக்கப்பட்ட நாகர்கோயில் சுடலைமுத்து கிருஷ்ணன் அவர்களின் நினவு தினம் இன்று.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2016, 9:38 am

‘கலைவாணர்’ என்றும் ‘என் .எஸ்.கே’ என்றும் அன்புடன் அழைக்கப்பட்ட நாகர்கோயில் சுடலைமுத்து கிருஷ்ணன் அவர்களின் நினவு தினம் இன்று.

இவர் 29.11.1908 அன்று நாகர்கோயில் மாவட்டத்தில் உள்ள ஒழுகின சேரி என்னும் கிராமத்தில் பிறந்தார்.   ஏழ்மை நிலையின் காரணமாக படிப்பைத் தொடர இயலாமல், தனது கிராமத்தில் உள்ள நாடக கொட்டகை ஒன்றில் சோடா விற்று வந்தார்.

பின்னர் நாடகத்தின் மீது  கொண்ட ஆர்வம் காரணமாக டி .கே.எஸ் சகோதரர்களின்  நாடக  கம்பெனியில் இணைந்து நடிக்கத்  தொடங்கினார். அபப்டியே படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாக்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

நாடக நடிகர், திரைப்பட நகைச்சுவை நடிகர், பின்னணி பாடகர், வசனகர்த்தா என்னும்பல்வேறு முகங்களைக் கொண்டவர்.   தனது மனைவி மதுரத்துடன் இணைந்து தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நகைச்சுவை ஜோடிகளில் ஒன்றாக வளைய வந்த  கலைவாணர் 'இந்தியாவின் சார்லி சாப்ளின்' என்று புகழப்பட்டவர்.வர் உடல் நலக் குறைபாடு காரணமாக 30.08.1957 அன்று மரணமடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.